கே.பி.ஆர் கல்லூரியில் சுழலும் சொல்லரங்கம் நிகழ்ச்சி

கோவை கே.பி.ஆர் கல்விநிறுவனங்களுடன் புதுயுகம் தொலைக்காட்சி இணைந்து “இனி ஒரு விதி செய்வோம்” எனும் சுழலும் சொல்லரங்கம் நிகழ்ச்சியின் துவக்க விழா வெள்ளிக்கிழமையன்று (19.2.2021) கே.பி.ஆர் கல்லூரியில் ராகம் அரங்கில் நடத்தியது.

இந்நிகழ்விற்கு சிறப்புவிருந்தினர்களாக பேரூராதீனம் தவத்திருசாந்தலிங்க மருதாசல அடிகளார் அவர்களும் கே.பி.ஆர்  குழுமத்தின் தலைவர் கே.பி.ராமசாமி அவர்களும் கலந்து கொண்டுச் சிறப்பித்தார்கள்.

இந்நிகழ்வில் கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் முதல்வர் பாலுசாமி அவர்களும் கே.பி.ஆர் தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் அகிலா அவர்களும் கலந்துகொண்டுச் சிறப்பித்தார்கள். இந்நிகழ்வில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய சிறப்பாளர்களைப் பாராட்டும் விதத்தில் அவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

இனி ஒரு விதி செய்வோம் நிகழ்வின் தொகுப்பாளர் கலையமுதன் அவர்கள் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியானது இன்றையக்காலச் சூழலில் மனித வாழ்க்கை பண்பட்டு நிற்கிறதா, பாழாகிக்கிடக்கிறதா, பயமுறுத்திக்பார்க்கிறதா, பழமையை நோக்கி நகர்கிறதா எனும் தலைப்புகளில் சுழலும் சொல்லரங்கம் நடைபெற்றது.