உங்கள் வீட்டின் முன்பு சேவையாற்ற தயார் – பிரதமர் மோடி

அசாம் மாநிலத்திற்கு இன்று (22.2.2021) சென்ற பிரதமர் மோடி அங்கு பல்வேறு நலத்திட்டங்களை  தொடங்கி வைத்தார்.

தேமாஜி அருகே உள்ள சிலபதரில் எண்ணெய் மற்றும் எரிவாயு சம்பந்தமான திட்டங்களை நாட்டிற்கு அர்ப்பணித்தார். மேலும் அவர் தேமாஜி பொறியியல் கல்லூரியை துவக்கி வைத்தார். தொடர்ந்து  சுவல்குச்சி  பொறியியல் கல்லூரிக்கு அடிக்கல் நட்டு வைத்தார்.

இதையெடுத்து  தேமாஜி  நகர் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி பேசியதாவது: மத்திய அரசும், அசாம் மாநில அரசும் ஒன்றாக இணைத்து செயல்படுவதால்  அசாம் மாநிலத்தில் திட்டங்கள் நல்ல முறையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்கு முன்னால் அசாமை ஆண்ட, அரசு சுகாதாரம், கல்வி,தொழித்துறை, தகவல் தொடர்பு போன்றவற்றில் முறையான கவனத்தை செலுத்தவில்லை. மேலும் உங்கள் வீட்டின் முன்பு வந்து சேவையாற்ற நாங்கள் தயாராக இருக்கின்றோம் என கூறினார் .

அசாமைத் தொடர்ந்து இன்று பிரதமர் மேற்கு வங்கம் சென்று அங்கு பல்வேறு ரயில்வே திட்டங்களை தொடங்குகிறார். மேலும் மெட்ரோ ரயில் விரிவாக்கம் தொடர்பான திட்டங்களையும் தொடங்கி வைக்கிறார்.