நெட்பிலிக்ஸில் வெளியாகுமா ஜகமே தந்திரம் ?  

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம்  படத்தின் டீசர் இன்று(22.2.2021) வெளியானது .

டீசர் வெளியான 7 மணி நேரத்திற்குள்ளாகவே ட்ரெண்டிங்கில் முதலிடத்தை பிடித்து, 2.4  மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. சுருளி என்கிற கதாபாத்திரத்தில் மதுரை கெங்ஸ்டர் தோற்றத்தில்  வரும் தனுஷின்    அதிரடி சண்டைக்காட்சிகள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டுகிறது.  சந்தோஷ் நாராயணன் இசையில் உருவான “ராகிட ராகிட” பாடல் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான இத்திரைப்படம் கடந்த மே மாதத்திலே வெளியாக இருந்த நிலையில் கொரோனா தொற்றின் காரணமாக வெளி வரவில்லை.

மேலும் இப்படத்தின் டீசர் ஓடிடி  தளமான நெட்பிலிக்ஸில் வெளியானது. ஆனால் படம் திரையரங்கில் வெளிவருமா அல்லது  ஓடிடி  தளத்தில் வெளிவருமா என்ற தகவல்களை திரைப்பட குழுவினர் இதுவரை தெரிவிக்கவில்லை.

பீட்ஸா, ஜிகர் தண்டா, இறைவி மற்றும் பேட்ட போன்ற தனித்துவமான கதை அமைப்பில் வெற்றி படங்களை தந்தவர் கார்த்திக் சுப்புராஜ். தனுஷின் கூட்டணியில் அமையும் இத்திரைப்படமும்  நல்ல கதையம்சத்துடன் இருக்கும் என ரசிகர்களால் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Story by : Ramya. S