கலைஞர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

கோவையில் நடைபெற்ற பீனிக்ஸ் புக் வேர்ல்டு ரெக்கார்டு சாதனை புத்தக விழாவில் கலைஞர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

2021 ம் ஆண்டிற்க்கான   பீனிக்ஸ் புக் வேர்ல்டு ரெக்கார்டு சாதனை புத்தக விழா நேற்று 21.2.2021 நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக பேரூராதினம் மருதாச்சல அடிகளார், திராவிடன் அறக்கட்டளையின் நிறுவன தலைவர் கோவை பாபு,கோவை மாவட்ட நடிகர் சங்க தலைவர் கோவை சாகுல், மதுரை அனுஷா, ஓசோன் யோகா மையத்தின் இயக்குனர் பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்கள் வாழ்நாள் சாதனையாளர்கள் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த கிராமிய கலைஞர்கள்,யோகா சாதனையாளர்கள், பயிற்சியாளர்கள், தமிழ் கலை சார்ந்த ஓவியர்கள், பாடகர்கள், ஊடகத்துறையினர் என பல துறை சார்ந்த 200 கலைஞர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர்கள் விருது வழங்கப்பட்டது.