கொரோனா காலத்தில் அதிகரித்த  கண் பாதிப்புகள்

கொரோனா பாதிப்புகள் படிப்படியாக குறைந்து வரும் நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 5 சதவீதம் பேருக்கு, கண் தொடர்பான பிரச்சனைகள் வருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

தொற்று ஏற்பட்ட 5 சதவீதம் பேருக்கு கண்கள் சிவப்பாக இருத்தல், கண்வலி, கண்ணில் உறுத்தல், நீர் வடிதல், கண் நரம்பிற்கு செல்லும் ரத்தக் குழாய்கள் அடைப்பு, ரத்தக் கசிவு மற்றும் ரத்தக் குழாய் வீக்கம் ஆகியவை ஏற்படுகிறது.

கொரோனோ பாதிப்பு ஏற்பட்டவர்கள் மட்டுமின்றி, பிறருக்கும் கண்புரை நோய், தீவிர உலர் கண் பிரச்சனைகள் அதிகரித்திருப்பதாகவும், இப்பெருந்தொற்று காலத்தில் கண் மருத்துவமனைக்கு மக்கள் வர தயங்குவதால் பாதிப்பு கூடியிருப்பதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

கொரோனாவில் இருந்து மீண்ட  பின்னரும் பல உடல் சார்ந்த பிரச்சனைகள் தொடர்வதால், கண் சம்மந்தமான பாதிப்பு ஏற்பட்டால் அலட்சியம் செய்யாமல், சிகிச்சை எடுத்துக் கொள்ளுமாறு மருத்துவ தரப்பில் வலியுறுத்துகின்றனர்.

Story By: Ramya. S