தமிழ் மொழி உரிமை மீட்பு ஆர்ப்பாட்டம்

தமிழ் மொழி உரிமை மீட்பு ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் ஆர்வலர்கள் சார்பாக கோவையில் இன்று (20.1.2021)ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோயம்புத்தூர் தமிழ் சங்கமம் மற்றும் தமிழ்மொழி காக்கும் கூட்டு இயக்கம் சார்பாக தமிழ் மொழி உரிமை மீட்பு ஆர்ப்பாட்டம் செஞ்சிலுவை சங்கம் முன்பாக நடைபெற்றது.

பேரூர் ஆதீனம் தவத்திரு மருதாசல அடிகளார் மற்றும் சிரவை ஆதீனம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திருக்கோவில்களில் தமிழில் வழிபாடு, குழந்தைகளுக்கு தமிழ் பெயர் சூட்டவேண்டும், வணிக நிறுவனப் பெயர் பலகையில் தமிழுக்கு முதலிடம் அளிக்க வேண்டும், தமிழ்மொழி பெற்றவர்களுக்கு 80 சதவீத அரசு பணி வழங்க வேண்டும், தொடக்க நிலை யிலும் தமிழ்மொழிக் கல்வி வழங்கப்பட வேண்டும் வரும் கல்வி ஆண்டிலேயே இதனை நடைமுறைப்படுத்த வேண்டும், தமிழ் ஆட்சிமொழி அலுவல் மொழியாகவும் எல்லா துறைகளிலும் நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத், தமிழ் புலவர் பெருமக்கள், தமிழ் அமைப்புகள் என பல்வேறு தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்