மனிதாபிமானத்தை வளர்த்துக் கொள்ளவேண்டும் – மூர்த்தி ஐ.பி.எஸ்

இந்துஸ்தான் கல்லூரியில் நுகர்வோர் கிளப் துவக்க விழா வெள்ளிக்கிழமை (19.2.2021)  நடைபெற்றது .

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சத்தியமங்கலம் சிறப்பு அதிரடிப்படையின் காவல்துறை கண்காணிப்பாளர் மூர்த்தி அவர்கள் கலந்து கொண்டு பேசியதாவது, மாணவர்களிடம் பேசுவதை நான் எப்போதும் விரும்புகிறேன்.  ஒவ்வொருவரும் நுகர்வோர் உரிமையை அறிந்திருக்க வேண்டும், ஏனெனில் எங்கள் வயதினரைக் காட்டிலும் மாணவர்கள் நீங்கள் எதையும் விரைவில் புரிந்து கொள்வீர்கள். காவல் அதிகாரி என்பதை விட பேராசிரியராக பணி புரிவதையே நான் அதிகம் விரும்புகிறேன் என்றார். தொடர்ந்து, நாம் அனைவரும் முக்கியமாக மனிதாபிமானத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் “ஆர்கனைசேஷனல் பிஹேவியர்  டேக்ஸ்ட்  அண்ட் கேஸஸ்” ( Organizational behavior text and cases ) என்ற நூலை சிறப்பு விருந்தினர் வெளியிட்டார்.

இந்துஸ்தான் நிறுவனங்களின் அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன், செயலாளர் பிரியா சதீஸ்பிரபு, முதல்வர் பொன்னுசாமி, பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.