தனியார் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் கோரிக்கை!

கோவை: உயர்கல்வி துறையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 2,331 உதவி பேராசிரியர்களை நியமிக்க அரசுக்கு கோரிக்கை.

இது குறித்து அவர்கள் கூறியதாவது, “அரசு 2019 ஆம் ஆண்டு டிஆர்பி (TRB) மூலம் அறிக்கை வெளியிட்டது. ஆனால் இதற்கு விண்ணப்பித்து காத்துக்கொண்டிருக்கின்ற எங்களுக்கு இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை, தற்போது கௌரவ விரிவுரையாளர்களை எவ்வித விதிமுறைகளையும் பின்பற்றாமல் நிரந்திரப்படுத்த இந்த அரசு முனைகிறது. இதை வன்மையாக  கண்டித்து அரசுக்கு மனு அனுப்பும் போராட்டத்தை மேற்கொள்கிறோம். நாங்கள் இந்த நடவடிக்கை மூலம் அரசின் கவனத்தை  ஈர்த்து டிஆர்பி மூலம் மட்டுமே உதவிப்பேராசிரியர்களை நியமிக்க வேண்டுகிறோம். மேற்கண்ட பணியிடங்களை உடனடியாக டிஆர்பி  மூலம் நிரப்பி சமூகநீதிகாக்கவும் வேண்டுகிறோம்.” என்று கூறினார்.