கல்லூரி மாணவர்கள் நடத்திய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நாடகம்

கோவை: சாலை பாதுகாப்பு குறித்து  விழிப்புணர்வு எற்படுத்தும் வகையில்  கல்லூரி மாணவர்கள் கோவை ரயில் நிலையத்தில் விழிப்புணர்வு நாடகம் நடத்தினர்.

கதிர் கல்லூரியை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள்  இதில் பங்கேற்று சாலை பாதுகாப்பு விழிப்புணர்விற்காக உறுதிமொழி எடுத்து மைம், டான்ஸ், நாடகம், போன்றவற்றை நடத்தினர்.

சாலையில் செல்லும்போது செல்போன் பயன்படுத்தக்கூடாது, மது அருந்தக் கூடாது, இரு சக்கர வாகனங்களில் செல்லும் போது தலை கவசம் அணிய வேண்டும் இவற்றை கடைபிடிப்பதின் மூலம் சாலை விபத்தில்லாத மாநிலமாக உருவாக்க முடியும் என மாணவர்கள் இந்நிகழ்வின் மூலம் எடுத்துரைத்தனர். இந்நிகழ்விற்கு கோவை இரயில்வே மண்டல இயக்குநர் ராகேஷ்குமார், உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.