பெட்ரோல், டீசல் விலை உயர்வு வாக்கு சதவீதத்தை பதிக்காது – பாஜக மாநில தலைவர் முருகன்

கோவை: பிரதமர் மோடி வரும் 25 ம் தேதி கோவை வரவுள்ள நிலையில் அவர் கலந்து கொள்ளும் பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கான பூமி பூஜை  கொடிசியா மைதானத்தில் இன்று (17.02.2021) நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை இணை அமைச்சர் வி .கே.சிங்  மற்றும் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் ஆகியோர் பங்கேற்றனர்.

பாஜக மாநிலத் தலைவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பிரதமர் மோடி கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில்  பா.ஜ.க முக்கிய தலைவர்கள் வருகின்றனர் என்றும் தேர்தல் பணிகளை முடுக்கிவிட  சென்னை, கோவை இரு இடங்களிலும் நிர்வாகிகளுடன் கூட்டங்கள் நடத்த இருக்கின்றோம் எனவும் தெரிவித்தார். மேலும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு வாக்கு சதவீதத்தை பாதிக்காது என்றும்  விலை உயர்வு  தற்காலிகமானது. மாநில அரசுகளை வரிகளை குறைக்க அறிவுறுத்தி இருக்கின்றோம் என்றார். தொடர்ந்து பா.ஜ.க  பூரணமதுவிலக்கை வலியுறுத்தி வருவதாகவும்  தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து விழாவில் பேசிய மத்திய உள்துறை இணை அமைச்சர் கிசன் ரெட்டி, கோவை பாஜகவுடன் உணர்வு பூர்வமான  தொடர்புடையது அதனால் தான் கோவையில் பிரதமர் மோடி பிரச்சாரத்தை துவக்குகிறார். தென்னிந்தியாவில்  பாஜக அதிக்கவனம் செலுத்தி வருவதாகவும், பாஜக நிர்வாகிகள் மோடி  பங்கேற்கும் கூட்டத்தில் பங்கேற்க பொதுமக்களை திரண்ட பணியாற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும் ஒவ்வொரு வீடுகளில் கடந்த ஆறு ஆண்டுகளில் பிரதமர்  மோடி என்னென நலத்திட்டங்களை கொண்டுவந்துள்ளார் என்பதை பரப்புரை செய்ய வேண்டும் என கூறினார்.