கோனியம்மன் கோவில் திருவிழா : மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்க கோரிக்கை

கோவை: கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழாவின் போது மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்க இந்து முன்னணியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்து முன்னணியின் கோவை மாநகர் மாவட்ட நகர் பொறுப்பாளர்கள் கூட்டம் காந்தி பார்க்கில் நேற்று (16.2.2021) நடைபெற்றது. மாவட்ட தலைவர் தசரதன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கோவை மாநகர காவல்துறையைக் கண்டித்தும் 19ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

மேலும், வருகின்ற மார்ச் மாதம் 3ம் தேதி நடைபெறும் கோனியம்மன் தேர்த்திருவிழாவின் போது மதுக் கடைகளுக்கு  விடுமுறையளிக்க வேண்டும், பெண்களை கேலி செய்பவர்களை அடையாளம் கண்டு அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும், தேர்த்திருவிழா அன்று நடைபாதை வியாபாரிகள் வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வைத்துள்ளனர்.