ரத்தினம் கல்லூரியில் பட்டய சான்றிதழ் படிப்பு

கோவை ரத்தினம் கல்லூரியில் அடக்கவிலை மேலாண்மை கணக்கியல் (Cost Management Accounting) என்ற பட்டய சான்றிதழ் படிப்பு திங்கள் (15.02.2021) அன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இப்பட்டய படிப்பு வணிகவியல் துறை மாணவர்களுக்காக தொடங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட கல்லூரியின் முதல்வர் முரளிதரன், மாணவர்களின் நலனில் இக்கல்வியின் அவசியம் குறித்தும், வேலை வாய்ப்பில் உள்ள பயன்கள் பற்றியும் எடுத்துரைத்தார். இதைத் தொடர்ந்து கோவை மணடலத்தின் அடக்கவிலை மேலாண்மையின் தலைவர் மதன கோபால் பேசுகையில், இப்பட்டய சான்றிதழ் படிப்பை கற்பதன் அவசியம் மற்றும் இதனால் வேலை வாய்ப்புகளில் மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவது குறித்து என பேசினார்.