கே.ஐ.டி- கல்லூரியில் எரிசக்தி சேமிப்பு பற்றி இணைய வழி தொடக்க விழா

கே.ஐ.டி- கல்லூரி   மற்றும் இந்திய பசுமை பொறியாளர்கள் நிறுவனம் இணைந்து “கிட்  – ஐஜென் கிரீன்9 என்சவ் கிளப்” (KIT – IGEN GREEN9 ENSAV CLUB) என்ற இணைய வழி தொடக்க விழாவை கடந்த வெள்ளிக்கிழமை (12.02.2021)அன்று  நடத்தியது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக ஐஜென் பொது செயலாளர் ஹட்சன் எக்பர்ட்,    உதவி நிர்வாக பொறியாளர் பாலமுருகன், என்சவ் கிளப் மென்டர் நடராஜன்  ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஐஜென் (IGEN) பொதுச் செயலாளர், ஹட்சன் எக்பர்ட், கலந்து கொண்டு கூறுகையில், கல்வி நிறுவனங்களில் எரிசக்தி சேமிப்பு கிளப்பைத் தொடங்குவது, எரிசக்தி சேமிப்பு தூதர்களை உருவாக்குவது குறிக்கோள்கள் ஆகும், அவர்கள் கிராமம் மற்றும் பள்ளிகளில் ஆற்றல் பாதுகாப்பு திட்டங்களையும்  விழிப்புணர்வையும் செயல்படுத்தலையும் உருவாக்குவார்கள் என்று எடுத்துரைத்தார்.

உதவி நிர்வாக பொறியாளர் பாலமுருகன் பேசுகையில், எரிசக்தியை எந்தெந்த வகையில் சேமிக்கலாம் என விளக்கமாக கூறி, நாளுக்கு நாள் மக்கள் தொகை பெருகிவரும் நிலையில் நாட்டின் மின்சக்தி தேவையை கருத்தில் கொண்டு,  மின்னாற்றல் சிக்கனமாக பயன்படுத்தவும், சேமிக்கவும் உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்ம் என்று கேட்டுக் கொண்டார்.

என்சவ் கிளப் மென்டர் நடராஜன் பேசியதாவது, எரிசக்தி சேமிப்பு பற்றிய விழிப்புணர்வை அவசியம் ஏற்படுத்த வேண்டும். புதுப்பிக்கத் தக்க எரிசக்திகளான சூரியசக்தி மற்றும் சி.எப்.எல் (C.F.L), எல்.இ.டி (LED) விளக்குகளை உபயோகிக்கவும், உயிரி எரிசக்திகளைப் பயன்படுத்தி   கரியமிலவாயுவை கட்டுப்படுத்தி சுற்றுச் சூழலை மேம்படுத்த வேண்டும் என பேசினார்.

ஐஜென் (IGEN) க்ரீன் 9 என்சவ் கிளப்பின்  தலைவர் பாண்டியன் மற்றும் ஆலோசகர் ரமேஷ்  மாணவர்களுக்கு டிஜிட்டல் சான்றிதழ்களை வழங்கினார்கள். மேலும் இந்நிகழ்ச்சியில் கே.ஐ.டி. கல்லூரியின் துணைத்தலைவர் இந்து முருகேசன், கல்லூரி முதல்வர் மோகன்தாஸ் காந்தி, கல்லூரி துணை முதல்வர் ரமேஷ், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.