ராமகிருஷ்ணா கலை கல்லூரிக்கு NAAC குழுவின் A + அங்கீகாரம்

ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தேசிய தரமதிப்பீடு மற்றும் அங்கீகாரக் குழு (NAAC) A+ அந்தஸ்த்தை வழங்கியுள்ளது.

பிப்ரவரி 11, 12 ஆகிய இரண்டு நாட்களில் NAAC குழுவின் பிரதிநிதிகள் இக்கல்லூரிக்கு வருகை தந்து கல்லூரியின் கல்வித்தரம், நவீன கற்றல் கற்பித்தல், உயர்கல்வி மேம்பாடு, ஆராய்ச்சித்துறை செயல்பாடுகள், உட்கட்டமைப்பு வசதிகள், சமூகப்பணி, விளையாட்டு, கலைத்துறைகளில் மாணவர்களின் சாதனைகள் ஆகிய பல்வேறு தகுதிகளின் அடிப்படையில் இ்க்குழு பல ஆய்வுகளை மேற்கொண்டது.

மேற்கண்ட அனைத்து விஷயங்களிலும் தனித்துவத்தோடு சமூகத்திற்கு நவீன கல்வியினை வழங்கி, சிறப்பாக செயல்பட்டு சாதனைகளை ஆற்றியதன் பேரில் 4 வது சுற்றில்  A+ அங்கீகாரத்தை இக்கல்லூரிக்கு  வழங்கியுள்ளது.

எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் லஷ்மிநாராயணசுவாமி மற்றும் இணை நிர்வாக அறங்காவலர் சுந்தர், தலைமை இயக்க அலுவலர் ஸ்வாதி ரோகித் ஆகியோர் கல்லூரியின் முதல்வர், செயலர் சிவக்குமார் மற்றும் பேராசிரியர்களுக்குப் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.