ராமகிருஷ்ணா கலை கல்லூரியில் என்.எஸ்.எஸ். சார்பில் புகைப்படக் கண்காட்சி

கோவை, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 11.02.2021 வியாழக்கிழமையன்று என்.எஸ்.எஸ். சார்பில் புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது. இந்நிகழ்விற்குக் கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் பி.எல்.சிவக்குமார் தலைமை தாங்கினார். பீகார், மகாத்மா காந்தி மத்தியப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சஞ்சீவ் குமார் சர்மா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்தார். கல்லூரியின் நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்களின் சமூக செயல்பாடுகளை வெளிப்படுத்தும் விதத்தில் கடந்த 5 ஆண்டுகளாக நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளின் புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. உடல் உறுப்பு தானத்திற்கான கின்னஸ் சாதனை, கொரோனா நோய் தொற்றுக்கான விழிப்புணர்வு சார்ந்த நிகழ்வுகள் முக்கிய இடம் பெற்றிருந்தன.

நிகழ்வில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர் சமூக அக்கறையோடு செயல்படும் இக்கல்லூரியின் என்.எஸ்.எஸ். மாணவர்களையும் ஒருங்கிணைப்பாளர்களையும் வெகுவாகப் பாராட்டி வாழ்த்தினார். கல்லூரியின் துணைமுதல்வர், முதன்மையர்கள், பேராசிரியர்கள் ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்று மாணவர்களைப் பாராட்டினர். இந்நிகழ்வினை நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர்களான பிரகதீஷ்வரன், சுபாஷினி, நாகராஜன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.