இந்துஸ்தான் கல்லூரி – சர்வதேச கில்ஸ் புரூக்கர் புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை: இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி மற்றும் இந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆப் அட்வான்ஸ்ட் ஸ்டுடிஸும், நியூஸிலாந்து சர்வதேச கில்ஸ் புரூக்கர் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

சர்வதேச கில்ஸ் புரூக்கர் நிறுவனம் நியூஸிலாந்து, சிங்கப்பூர், வியட்நாம், இந்தோனேசியா மற்றும் பல பல்கலைக்கழகங்களுடன் இணைந்து சர்வதேச அளவிலான சான்றிதழ் வகுப்புகள், ஆய்வுகள், கருத்தரங்குகள், குறிகிய கால வகுப்புகள், பயிற்சிகள், மாணவர்களின் வேலைவாய்ப்புத் தகுதிகளை மேம்படுத்துதல் மற்றும் ஆலோசனை வழங்குதல் முதலியவற்றை நடத்தி வருகிறது. இந்நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளதால் இந்துஸ்தான் நிறுவன மாணவர்கள், ஆய்வாளர்கள் சர்வதேச அளவிலான கற்றல், கற்ப்பித்தலில் மேம்படவும் புதிய பணி வாய்ப்புகள் பெறவும் முடியும். மேலும் பன்னாட்டு மாணவர்கள் இந்துஸ்தான் நிறுவனங்களில் பயிற்சி பெறவும் வழி செய்யப்படுகிறது.

சர்வதேச கில்ஸ் புருக்கர் நிறுவனத்தின் தலைவர் கில்ஸ் புருக்கர், நிர்வாக இயக்குநர் பிரபா கோவிந்தசாமி மற்றும் இந்துஸ்தான் கல்விக் குழுமத்தின் தலைவர் சரஸ்வதி கண்ணையன், செயலர் பிரியா சதீஷ்பிரபு ஆகியோர் இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இந்துஸ்தான் கல்லூரியின் முதல்வர் பொன்னுசாமி, மேலாண்மை அறிவியல் இயக்குநர் சுதாகர், சர்வதேச கில்ஸ் புருக்கர் நிறுவனத்தின் நிர்வாக மேலாளர் இந்துமதி, நிர்வாக அதிகாரி சங்கர், துறை வல்லுநர்கள் ஆகியோர் இந்நிறுவனத்தின் பங்கேற்பாளராக உள்ளனர்.