வேளாண்மைக்கும்  ஊர்ப்புற வளர்ச்சிக்குமான தேசிய வங்கியின் செயல்பாடு குறித்த கருத்தரங்கம்

கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் வணிகவியல் துறையும் மேலாண்மையியல் துறையும் இணைந்து வேளாண்மைக்கும் ஊர்ப்புற வளர்ச்சிக்குமான தேசிய வங்கியின் சிறப்புகள் குறித்த கருத்தரங்கம் 11ம் தேதி வியாழக்கிழமையன்று நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியின் தலைவர் ஜிந்தாலா, சென்னை பிராந்திய அலுவலக தலைமை மேலாளர் செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார்கள். கல்லூரியின் முதல்வர் பாலுசாமி வரவேற்புரை வழங்கினார்.

கே.பி.ஆர் குழுமத்தின் தலைவர் கே.பி.ராமசாமி, பெண் கல்வியின் இன்றியமையாமை குறித்தும் பெண் தொழிற்கல்வியின் சிறப்பு குறித்தும் எடுத்துரைத்தார். இரண்டாயிரமாண்டு காலத்திற்கு முற்பட்ட மனிதகுல தோற்றம் மற்றும் மனித நாகரீகத் தோற்றத்திற்கு விவசாயமே அடிப்படையான ஒரு முக்கியக் காரணம் என்றும் குறைந்த வட்டிக்கடன் வழங்குதல் பற்றியும் நபார்டின் கடன் திட்டமிடல், செயல்பாட்டுத் திட்டம், செயல்படும் முறைகள், சுய உதவிக்குழுக்களின் நடைமுறை பற்றியும் சுய உதவிக்குழுக்களின் மூலம் தொழில் வளர்ச்சி மற்றும் தொழில் முனைவோர் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார். மேலும், தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியின் “ஆத்ம நிர்பா  பாரத்” இன் இன்றியமையாமை குறித்தும் தற்சார்பு உரிமை பற்றியும் எடுத்துரைத்தார். இந்நிகழ்வில் கல்லூரி பேராசிரியர்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.