உலகின் மிக பழமையான விலங்கின் எச்சம் கண்டெடுப்பு!

உலகின் மிக பழமையான விலங்கின் எச்சத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர்.

மத்திய பிரதேச மாநிலத்தின் போபால் அடுத்த பழங்கால பீம்பேத்கா கற்பாறைகள் பகுதியில் டிக்கின்சோ என்ற பழங்கால விலங்கின் எச்சத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர். ஆராய்ச்சியாளர்களின் தகவலின் படி விலங்கின் படிமம் 17 அங்குல நீளம் கொண்டதாகவும், சுமார் 570 மில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் தொடர் ஆய்வு செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.