‘மக்களின் மினி மால்’ புதுமையான ஷாப்பிங் மால் கோவையில் துவக்கம்

கோவையின் அடிப்படை கட்டமைப்பு வளர்ச்சிக்கு உறுதுணையாக ஏ.எம்.பி மால் இன்டியா மற்றும் கோயம்புத்துார் சேம்பர்ஸ் ஆகியவை இணைந்து ஒரு தனித்துமிக்க மால் ஒன்றை நகரில் துவக்கியுள்ளது. இந்த மாலில் படகாஸ் உணவகம் ஒன்றும் துவங்கப்பட்டுள்ளது.

மக்களின் மினி மால் என்ற இந்த புதுமயைான ஷாப்பிங் மால், கோவையில் முதல் முறையாக மேட்டுப்பாளையம் ரோட்டில், கவுண்டம்பாளையம் அருகே உள்ள சேரன்நகரில் துவங்கப்பட்டுள்ளது.

ஏ.எம்.பி., மால் இன்டியாவின் தலைமை செயல் அதிகாரி ராஜேஷ் மற்றும் தங்கம் சேம்பர்ஸ் நிர்வாக இயக்குனர் தங்கவேலு கூறியதாவது:

மக்களின் மினி மால், ஆறு மாடி கட்டடத்தில் 60,000 சதுரடியில் கட்டப்பட்டுள்ளது. தற்போது 20க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன, விரிவாக்கம் செய்யும் எண்ணமும் உள்ளது. 100 வாகனங்கள் நிறுத்த இடவசதிகள் உள்ளன. மதிப்புக் கூடுதல் சேவையாக, ஓராண்டிற்கு வாகனங்கள் நிறுத்த கட்டணம் கிடையாது. முதல் இரண்டு தளங்களில் கடைகள், உணவகங்கள், ஆயத்த ஆடைகள் உள்ளன. மற்றும் இரண்டு தளங்களில் கூட்டங்கள் நடத்தவும், திருமணங்கள், விசேஷங்களுக்கான விழாக்கள் நடத்தவும் கூடங்கள் உள்ளன.

இந்த மாலில், ஆயத்த ஆடைகள், வீட்டு உபயோக ஜவுளிகள், அழகிய தங்க நடைகள், உபகரணங்கள், பரிசு பொருள் கடைகள், பொம்மை கடைகள் மற்றும் வீட்டிலேயே செய்யப்படும் சாக்லேட் கடைகள் உள்ளன. கவுண்டம்பாளையம், நல்லம்பாளையம், துடியலுார், மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள அனைவருக்கும் சிறந்த பொழுதுபோக்கு இடமாகவும், கொண்டாடும் இடமாகவும் உள்ளது. கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் முதல் முறையாக துவக்கப்பட்டுள்ள மால் இது.

மக்களின் மினி மாலில், விலைக்கு ஏற்ற மதிப்புமிக்க பொருட்களையும், தயாரிப்புகளையும் அளிப்பது தான் எங்களது அணியின் முதல் பணி. எதிர்காலத்தில் கோவைப்புதுார் மற்றும் சரவணம்பட்டி ஆகிய இடங்களில் 6000 சதுரடி முதல் 40000 சதுரடி வரை துவங்குவது தான் எங்களது திட்டம். கோவையில் 75000 சதுரடிக்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை இடங்களை கொண்டுள்ளோம்; 1000க்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்புகளை நேரடியாகவும், மறைமுகமாகவும் வழங்கியுள்ளோம். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

படகாஸ் உணவுகம் குறித்து ஏ.எம்.பி மால் இன்டியாவின் தலைமை செயல் அதிகாரி கூறுகையில், ‘‘இந்த மாலின் முதல் தளம், உணவகங்களுக்காக பிரத்யோகமாக உருவாக்கப்பட்டுள்ளது. ஆக்ராவின் சாட், செட்டிநாடு அசைவ உணவுகள், தமிழ்நாடு பாராம்பரிய உணவுகள், சீனா உணவு வகைகள், ஐஸ்க்ரீம் மற்றும் குளிர்பானங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த மாலின் சிறப்பம்சம், உணவு பொருட்கள் நியயாமான விலையில் கிடைக்கும்,’’ என்றார்.