சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் கடன் வழங்குவதற்கான சிறப்பு முகாம்

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் கடன் வழங்குவதற்கான சிறப்பு முகாம் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் 02.02.2021 முதல் 06.02.2021 வரை நடைபெறவுள்ளது. என மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களான தனிநபர் கடன் திட்டம், சுய உதவி குழுக்களுக்கான சிறுதொழில் கடன் திட்டம், கல்வி கடன் திட்டம் ஆகிய திட்டங்களுக்கான கடன் வழங்குவதற்கான சிறப்பு முகாம் கோவை மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் 2.2.2021 முதல் 6.2.2021 வரை நடைபெறவுள்ளது.

டாக்டர் நஞ்சப்பா ரோட்டில் உள்ள கோவை நகர கூட்டுறவு வங்கி, பேங்க் ரோடு, ரயில் நிலையம் எதிரில் உள்ள கோவை மாவட்ட மத்திய  கூட்டுறவு வங்கி ஆகிய இடங்களில் 2.2.2021 அன்றும், (பொள்ளாச்சி) உடுமலை மெயின் ரோட்டில் உள்ள பொள்ளாச்சி நகர கூட்டுறவு வங்கி, மதுக்கரை மார்க்கெட், மெயின் ரோட்டில் உள்ள கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஆகிய இடங்களில் 3.2.2021 அன்றும், (மேட்டுப்பாளையம்) ஊட்டி மெயின்ரோட்டிலுள்ள, மேட்டுப்பாளையம் நகர கூட்டுறவு வங்கி, போத்தனூர் மெயின்ரோடு, சுந்தராபுரத்திலுள்ள, கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஆகிய இடங்களில் 4.2.2021 அன்றும், (பொள்ளாச்சி) அழகப்பா லே அவுட், வள்ளலார் தெரு, வெங்கடேசா காலனி கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் 5.2.2021 அன்றும், ஜீவன் திடல், கரும்புக்கடை, பாலக்காடு மெயின் ரோடு, டோல்கேட் கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் 6.2.2021 அன்றும் லோன் மேளா நடைபெறவுள்ளது. அனைத்து லோன் மேளாக்களும் மேற்குறிப்பிடப்பட்ட நாட்களில் முற்பகல் 10 மணி முதல் பிற்பகல் 4 மணிவரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் வசிக்கும் 18 வயது பூர்த்தி அடைந்த 60 வயதுக்கு  மேற்படாத சிறுபான்மையினர்கள் (கிறிஸ்துவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின்) இக்கடன் திட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம். குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும். திட்டம் 1-ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் நகர்ப்புறமாயின் ரூ.1,20,000க்கு மிகாமலும், கிராமப்புறமாயின் ரூ.98,000க்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். திட்டம் 2-ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8,00,000க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். விண்ணப்பதார்கள், சாதிச்சான்று, ஆதார் கார்டு, வருமான சான்று, இருப்பிடச் சான்று, கடன் பெறம் தொழில் குறித்த விவரம்/ திட்ட தொழில் அறிக்கை, டிரைவிங் லைசென்ஸ்,(போக்குவரத்து வாகனங்கள் கடன் பெறுபவர்கள் மட்டும்) மற்றும் வங்கிகள் கோரும் இதர ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கும் போது பள்ளி மாற்றுச் சான்றிதழ் மற்றும் உண்மைச் சான்றிதழ்களின் நகல்களையும் சமர்ப்பிக்க வேண்டும். டாம்கோ கடன் பெற விண்ணப்பிக்க விரும்பும் சிறுபான்மையின மக்கள் கொரோனா பெருந்தொற்று காரணத்தினால், சமூக இடைவெளியைப் பின்பற்றி மேற்படி கடன் மேளாக்களில் உரிய முறையில் விண்ணப்பித்து இச்சிறப்பு முகாமில் கலந்துக் கொண்டு அனைத்து சிறுபான்மையின பொதுமக்களும் கடன உதவி பெற்று பயனடையமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். என மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி தெரிவித்துள்ளார்.