தேசிய மின்சார சேமிப்பு விருதை 6-வது முறையாக வென்றிருக்கிறது சி.ஆர்.ஐ!

கோவை, சி.ஆர்.ஐ 2020-ம் வருடத்திற்கான தேசிய மின் சேமிப்பு விருதை 6-வது முறையாகவும், தொடர்ச்சியாக 4 முறையும் தொடர்ந்து வென்றிருக்கிறது.

இதுவரை 17,000 மில்லியன் யூனிட்களுக்கும் அதிகமான மின்சாரத்தை சேமித்துள்ளது சி.ஆர்.ஐ. மின்சார சேமிப்பது மட்டுமின்றி, சி.ஆர்.ஐ. பம்புகள் கார்பன் படிவதையும் சுமார் 14 மில்லியன் மெட்ரிக் டன் அளவிற்கு குறைத்துள்ளது. மின்சக்தியைச் சேமிக்கும் பம்புகள் தயாரிப்பதை முக்கிய குறிக்கோளாக கொண்ட சி.ஆர்.ஐ பொறுப்போடு செயல்படுவது மட்டுமல்ல அதேயளவு புதுமையோடும் செயல்படுகிற பிராண்ட் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறது.

நட்சத்திர குறியீடு  பெற்ற பம்புகளைத் தயாரிப்பதற்கு பெயர்பெற்ற சி.ஆர்.ஐ இது வரை தேசம் முழுவதிலும் 1.65 மில்லியனுக்கும் அதிகமான பம்புகளை வெற்றிகரமாக நிறுவியுள்ளது. இதனால் விவசாயம், தயாரிப்பு தொழிற்சாலைகள் என்ற பல பிரிவினரும் அதிகளவில் மின் சேமிப்பு செய்ய உதவியிருக்கிறது.

இந்த விருதை மின் சக்தி துறையின் மதிப்புமிக்க மந்திரியான ஆர்.கே.சிங் வழங்க, சி.ஆர்.ஐ குழுமத்தின் இணை நிர்வாக இயக்குனர் செல்வராஜ் பெற்றுக்கொண்டார். அப்போது பேசிய அவர், மின் சேமிக்கும் அதிக திறன் வாய்ந்த பம்புகளைத் தயாரித்ததற்காக இந்த என்இசி தேசிய விருதை சி.ஆர்.ஐ ஆறாவது முறையாகப் பெற்றிருக்கிறது, இதன் மூலம் எங்கள் வாடிக்கையாளர்களும் இந்த நாடும் பெருமளவு ஆற்றலையும் செலவினங்களையும் மிச்சப்படுத்த உதவி செய்திருக்கிறது. இந்த விருதை இந்த வருடம் 6வது முறையாக, அதிலும் நான்கு முறைகள் தொடர்ந்து பெற்றிருக்கிறோம் என்பதை மிகவும் பெருமிதத்தோடு தெரிவித்துக்கொள்கிறேன். மின்சாரம் சேமிப்பதில் எங்களது விடாமுயற்சியை அறிந்து அதைப் பாராட்டியதற்காக இந்திய அரசாங்கத்திற்கு நன்றி.