50 மணிநேர இடைவிடா பாடும் நிகழ்ச்சி: இந்துஸ்தான் பேராசிரியருக்கு விருது

‘பாடும் நிலா’ எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களின் நினைவாக ‘எஸ்.பி.பி. 50 மணிநேர இடைவிடா இணையவழி பாடல் நிகழ்ச்சி’ அசிஸ்ட் உலக சாதனை நிறுவனம் சார்பாக சென் அகாடமி இயக்குநர் முனைவர் ஆர்.கவிதா அவர்களால் அண்மையில் நடத்தப்பட்டது. இதில் உலக அளவில் 200 எஸ்.பி.பி. அவர்களின் ரசிகர்கள் மற்றும் நண்பர்கள் 10 பிரிவுகளில் பங்கேற்றனர். இப்போட்டியில் இடைவிடாமல் 25 க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி சாதனை செய்த கோவை இந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் மற்றும் பாடகர் முனைவர் பா.பிரபு அவர்களுக்கு ‘அசிஸ்ட் வோல்டு ரெகார்ட் சாதனையாளர் விருது’ வழங்கப்பட்டது. விருது வென்ற பேராசிரியரை இந்துஸ்தான் கல்விக் குழுமங்களின் தலைவர் கண்ணையன், இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன், கல்லூரி செயலர் பிரியா சதீஷ்பிரபு, கல்லூரி முதல்வர் பொன்னுசாமி, மொழித் துறைத் தலைவர் இரா.இரமேஷ்குமார் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.