ஜக்ளிங் கலையில் சாதனை செய்த 14 வயது சிறுவன் !

ஜக்ளிங் கலையை செய்யும் போதே பந்துகளை வீசி வித்தை காட்டி இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம் பிடித்த கோவையை சேர்ந்த 14 வயது சிறுவனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

கோவை கேஎன்ஜி புதூர் பகுதியை சேர்ந்த பிரபல மேஜிக் கலைஞரான மகேந்திரன் கடந்த 15 ஆண்டுகளாக மேஜிக் நிகழ்ச்சிகளை, பல்வேறு மேடைகளில் செய்து வருகிறார். இவர் தனது மகனான சந்தோஷ்க்கு ஜக்ளிங் பயிற்சியை அளித்துள்ளார். இதனை தொடர்ந்து ஜக்ளிங் கலையை கற்றுக்கொண்டு அதில் புதிய விதமாக இரண்டு வீல் கொண்ட வேவ் போர்டில், ஏறி அதனை ஓட்டிக்கொண்டே, மூன்று பந்துகளின் மூலமாக, ஜங்ளிங் செய்து படி, 25 கோன்களுக்கு இடையில், ஒரு நிமிடத்தில் 150 முறை, பந்துகளை பிடித்து, இந்திய புக் ஆஃப், ரெக்கார்டு என்ற  சாதனையை படைத்துள்ளார் சந்தோஷ். இன்னும் சில மாதங்களில் 4 பந்துகளை வைத்து கின்னஸ் சாதனை முயற்சி செய்ய உள்ளதகா சந்தோசின் தந்தை மகேந்திரன் தெரிவித்தார்.