தானீஷ் அஹமது தொழில்நுட்ப கல்லூாயில் 72வது குடியரசு தினவிழா

கோவை, கா.கா.சாவடியில் உள்ள தானீஷ் அஹமது தொழில்நுட்ப கல்லூாயில் 72வது குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது

இவ்விழாவில் கல்லூரியின் இயக்குனர் கே.ஏ.அக்பர் பாஷா தலைமை வகித்தார். கல்லூரியின் முதன்மை செயல் அதிகாரி ஏ.தமீஸ் அஹமது அவர்கள் முன்னிலையில் கல்லூரியின் முதல்வர் கே.ஜி.பார்த்தீபன் தேசிய கொடியினை ஏற்றி சிறப்புரை ஆற்றினர். பின்னர் கல்லூாயில் உள்ள பேராசிரியர்கள், அலுவலர்கள் அனைவரும் தேசிய ஒருமைப்பாட்டு உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர். பின்னர் இனிப்புகள் வழங்கி குடியரசு தினவிழா சிறப்புற கொண்டாடப்பட்டது.

குடியரசு தினவிழாவினை முன்னிட்டு மாணவ-மாணவியர்களுக்கு மூன்று நாள் நிகழ்ச்சியாக ஒவ்வொரு துறைக்கான இணைய வழி கருத்தரங்கம், தொழில்நுட்ப ஆய்வுக்கட்டுரைகள், விவாதம், வினாடி-வினா ஆங்கில பேச்சாற்றல், ஓவியப்போட்டி, போஸ்டர் வடிவமைப்பு போட்டிகள் இணைய வழியில் நடத்தப்பட்டது.