கேபிஆர் கல்லூரியில் 72வது குடியரசு தின விழா

கோவை கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரிகளின் சார்பாக, 72ம் ஆண்டு குடியரசு தின விழா மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது.

விழாவின் வாழ்த்துரையினை கே.பி.ஆர் பொறியியல் கல்லூரியின் முதல்வர் அகிலா மற்றும் கே.பி.ஆர் கலை கல்லூரியின் முதல்வர் பாலுசாமியும் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக “இளம்பாரதி விருதாளர்” மதன்குமார் கலந்துகொண்டு தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் அவர், “கண்ணீர் விட்டே வளர்த்தோம்” எனும் பொருண்மையில், 72ம் ஆண்டு குடியரசு தின விழா சிறப்புரை வழங்கினார். தொடர்ந்து கல்லூரி மாணவர்களின் கலைகளான சிலம்பம், கராத்தே, களரி, வாள் வித்தைகளும் நிகழ்த்தப்பட்டது. இவ்விழாவில் கே.பி.ஆர் கல்வி குழுமங்களின் நிர்வாக அதிகாரிகள், முதன்மையர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டு, விழாவினைச் சிறப்பித்தார்கள்.