பி .எஸ் .ஜி பொறியியல் கல்லூரியில் குடியரசு தின விழா

கோவையில் உள்ள பி.எஸ்.ஜி பொறியியல் கல்லூரியில் 72 வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் கல்லூரி முதல்வர் பிரகாசன் தேசிய கொடியை ஏற்றினார். மேலும் இந்த விழாவில் பி.எஸ்.ஜி பொறியியல் கல்லூரியின் என்சிசி அதிகாரி கண்ணன், பி.எஸ்.ஜி பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் கிரிராஜ் ஆகியோர் பங்கேற்றனர். இரு கல்லூரியின்  ஆசிரியர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.