தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 72வது குடியரசு தினவிழா

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 72வது குடியரசு தினவிழா இன்று செவ்வாய்க்கிழமை  சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணை வேந்தர், குமார் தேசியக் கொடி ஏற்றி குடியரசு தினவிழா உரையாற்றினார்.

துணைவேந்தர் தனது உரையில், நமது இந்திய தேசத்தின் தலைவர்களின் தியாகங்களை நினைவு கூர்ந்தார். வேளாண் ஆராய்ச்சியில் அகில இந்திய அளவில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் நான்காவது இடத்தை இந்த பொன்விழா கொண்டாடும் தருணத்தில் அடைந்ததற்க்கு வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் மாணவர்களின் உழைப்பை பாராட்டினார். தற்போதுள்ள கொரோனா தொற்று சூழ்நிலையில் மற்ற பல்கலைக்கழகங்களுக்கு முன் மாதிரியாக வேளாண்மைப் பல்கலைக்கழகம் மின்வழி முறையில் வகுப்புகளையும், தேர்வுகளையும் நடத்தியது அகில இந்திய வேளாண் தேர்வில் முதலிடம் வகித்த தோட்டக்கலை துறையை சார்ந்த காளீஸ்வரி மற்றும் அனைவரையும் வாழ்த்தினார். அண்மையில் 11 புதிய பயிர் ரகங்களை பொங்கல் பரிசாக வேளாண்மை பல்கலைக்கழகம் வழங்கியது. அதற்காக பாடுபட்ட அனைத்து விஞ்ஞானிகளையும் பாராட்டி ஊக்குவித்தார்.

துணை குடியரசு தலைவர் வெங்கைய நாயுடு  41வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று நமது பல்கலைக்கழத்தின் பாரம்பரியத்தையும் பாரம்பரிய உணவு முறையின் சிறப்பை விவரித்ததையும் நினைவு கூர்ந்தார். மேலும், வேளாண் பட்டதாரிகளை ஒருங்கிணைத்த மனதுடன் அயராமல் பாடுபட்டு, தமிழக விவசாயிகளின் நலனையும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியையும் ஊக்குவிக்க அறிவுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியில், பல்கலைக்கழகத்தின் உயர் அதிகாரிகள், பேராசிரியர்கள், மற்றும் அனைத்து தொழிலாளர்கலும் கலந்து கொண்டார்கள்.