முதலமைச்சருக்கு தமிழக பாரம்பரிய கலைகளுடன் வரவேற்பு

கோவை சிங்காநல்லூரில் இரண்டாவது நாள் பிரச்சாரத்தை துவக்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு திருச்சி சாலை பகுதியில் தமிழக பாரம்பரிய கலைகளுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது

கோவை மாவட்டத்திற்கு இரண்டு நாட்கள் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் தமிழக முதல்வர் இன்று இரண்டாவது நாள் பிரச்சாரத்தை துவக்கினார். தேர்தல் பிரச்சாரத்திற்கு எந்த ஊருக்கு சென்றாலும் அங்குள்ள பிரபல கோவில்களில் தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ள முதலமைச்சர், கோவையில் இரண்டாவது நாள் பிரச்சாரத்தை உலகில் மிக பெரிய விநாயகர் சிலை அமைந்துள்ள புளியகுலம் விநாயகர் கோவிலில் தரிசனம் செய்து விட்டு பிரச்சாரத்தை ஆரம்பித்தார்.

சிங்காநல்லூரில் இரண்டாவது நாள் பிரச்சாரத்தை துவங்கிய நிலையில் அவருக்கு வழியில் அகில இந்திய மள்ளர் எழுச்சி பேரவை சார்பாக தமிழக பாரம்பரிய கலைகளுடன் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. பேரவையின் தலைவர் மனுநீதி சோழன் தலமையில் நடைபெற்ற இதில், தேவேந்திர குல வேளாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வாக்குறுதி வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர். தொடர்ந்து அவர் திருச்சி சாலை வழியாக சிங்காநல்லூர் கரும்பு கடை மைதானத்தில் பிரச்சாரம் செய்தார்.