நேதாஜியின் திரு உருவ படத்திற்கு மரியாதை செலுத்திய கேபிஆர் கல்லூரி

கோவை: கேபிஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் 125-வது பிறந்தநாளை முன்னிட்டு கல்லூரி வளாகத்தில் நேதாஜியின் திரு உருவ படத்திற்கு கல்லூரியின் முதல்வர் அகிலா மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் கல்லூரியின் என்.சி.சி. பிரிவு மாணவிகள், கல்லூரி பேராசிரியர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.