மாணவர்களுக்கு முதல் 2 நாட்கள் மன திட ஆலோசனைகள் வழங்க ஆசிரியர்களுக்கு அறிவுரை

நீண்ட இடைவெளிக்கு பிறகு மாணவர்கள் பள்ளிக்கு வருவதாலும், பொதுத்தேர்வு குறித்த அச்சம் இருப்பதாலும் முதல் 2 நாட்களுக்கு பாடங்கள் எடுக்காமல் பொதுவான மன திட ஆலோசனைகள் வழங்க ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து மாணவர்களுக்கும் ஒரே நேரத்தில் பள்ளிக்கு வருகை புரியாமல் 10 நிமிட இடைவெளியில் 20 மாணவர்கள் என்ற அளவில் உள்ளே வருமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

உணவு அருந்தும் போது, கழிவறைக்கு செல்லும் போது மாணவர்கள் கூட்டமாக செல்வதை தவிர்க்க வேண்டும். மேலும் அதற்காக கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். கூட்ட நெரிசலை தவிர்க்க இறைவணக்க கூட்டம் விளையாட்டு நிகழ்ச்சிகள் கலாச்சார நிகழ்வுகள் தவிர்க்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.