பி.எஸ். ஞானதேசிகன் ஒரு சமரசமில்லாத தேசியவாதி – வானதி சீனிவாசன்

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் எம்.பி.யும் மூத்த வழக்கறிஞருமான பி.எஸ். ஞானதேசிகன் உடல் நலக் குறைவு காரணமாக ஜனவரி 15, 2021ல் இயற்கை எய்தினார்.

அவரின் இறப்பிற்கு பாரதிய ஜனதா கட்சியினுடைய மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது செய்தியில் கூறியதாவது :

“எங்களின் மூத்த வழக்கறிஞர் திரு. பி.எஸ். ஞானதேசிகன் அவர்கள் மறைவு பேரிழப்பாகும்.
சமரசமில்லாத தேசியவாதி, அன்பாலும், கருணையாலும் ஆயிரக்கணக்கான நபர்களை ஈர்த்தவர்.”

“என் வழக்கறிஞர் பணியில் அவர் கொடுத்த சுதந்திரமும், வாய்ப்புகளும் ,தன்னம்பிக்கையும்
நான் உயர முக்கிய காரணமானது, அவரின் நிழலில், வழக்குகளை கையாண்டபோது சட்டங்களை மட்டுமல்லாது , நேர்மையில் நிற்பது , எளியவர்களுக்கு உதவுவது, மனித எண்ணங்களை நுணுக்கமாக புரிந்து கொள்வது என பல்வேறு விதங்களில் என்னுள் தாக்கத்தை ஏற்படுத்தியவர் . அவர் வணங்கும் நாகாத்தம்மன் அருளால் அவர் ஆன்மா நற்கதியடையட்டும்.” இவ்வாறு அவர் கூறினார்.

வழக்கறிஞர் தொழிலில் பி.எஸ். ஞானதேசிகனிடம் ஜூனியராக கிட்டத்தட்ட 10 ஆண்டுகாலம் வானதி சீனிவாசன் பணியாற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.