கொங்குநாடு கல்லூரியில் பொங்கல் விழா

கோவை: கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் மாணவர்நல மையத்தின் சார்பில் 12.01.2021 அன்று பொங்கல் விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் கல்லூரியின் செயலர் மற்றும் இயக்குநர் சி.ஏ.வாசுகி தலைமையுரையாற்றினார். கல்லூரி மேலாண்மைக் குழுவின் பொருளாளர் மருத்துவர் பரமசிவன் முன்னிலை வகித்தார். பாரதியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் முருகன் மற்றும் கல்லூரி முதல்வர் லச்சுமணசாமி வாழ்த்துரை வழங்கினர். மாணவர் நல மையத்தின் இயக்குநர் முத்துக்குமார் வரவேற்புரையாற்றினார். முன்னதாக, சூரியப் பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என்னும் முப்பொங்கல் வைத்து வழிபாடு செய்யப்பட்டது. கல்லூரியின் செயலர் அவர்கள் நாட்டுக் காளைகளுக்கு பொங்கல், பழம், கரும்பு ஆகியவற்றைக் கொடுத்து மரியாதை செய்தார். அதனைத் தொடர்ந்து கும்மியாட்டம், சிலம்பாட்டம் ஆகிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.