திறன் மேம்பாட்டுப் பயிற்சி

கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் கெரியர் டெவலப்மென்ட் சென்டர் (Career Development Center) மற்றும் கணினிஅறிவியல் துறை இணைந்து மாணவர்களுக்குரிய திறன் மேம்பாட்டுப் பயிற்சியினை வழங்கியது. இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினர்களாக பேபால் சாப்ட்வேர் டெவலப்பர் (paypal Software Developer) ருத்திரேஷ்வர் கஜேந்திரன், சதவர் டெக்னாலஜிஸின் முதன்மை செயல் அதிகாரி அசோக் மாரிமுத்து மற்றும் குவி கிக் (Guvi Geek) நெட்ஒர்க் பிரைவேட் லிமிடெடின் தலைமை பயிற்சியாளர் மகேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார்கள். இந்நிகழ்விற்கு கல்லூரியின் முதல்வர் பாலுசாமி தலைமையுரை வழங்கிச்சிறப்பித்தார்.

சிறப்பு விருந்தினர்கள் தமது சிறப்புரையில் கணினி மொழியின் நிபுணத்துவம் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார்கள். மேலும், தொழில்நுட்ப ரீதியாக இருக்கக்கூடிய இடர்பாடுகளையும் அதன் தீர்வுகளையும் எடுத்துரைத்து அத்துறையில் எவ்வாறு வலுவாதல் என்றும் மாணவர்களுக்கு விரிவாக எடுத்துரைத்தார்கள். தகவல் தொழில்நுட்பம், பன்மொழித் திறமைகள், புதிய தரவுகளைத் தெரிந்து கொள்ளுதல், வடிவமைப்பு, நிரல், நிரல்களை பரிசோதிக்கும் திறன் முதலியனவற்றை எடுத்துரைத்து மாணவர்களை நெறிப்படுத்தினர். குவி தளத்தின் செயல்பாடுகள் அத்தளத்தின் சிறப்புகள் குறித்து விளக்கினர். இந்நிகழ்வில் 150 மாணவர்கள் சமூக இடைவெளியுடன் கலந்துகொண்டு பயனடைந்தனர்.