கர்ப்பிணி பெண்களுக்கு வைட்டமின் டி முக்கியம் !

எழுப்புகளின் ஆரோக்கியத்திற்கு வைட்டமின் டி மிக முக்கியமானது என்பது அனைவரும் அறிந்ததே. வைட்டமின் டி குறைபாடு ஏற்பட்டால் எலும்புகள் பாதிக்கக்கூடும். உடலுக்கும் தீங்கு விளைவிக்கும். அதுமட்டுமில்லாது, கர்ப்பத்தில் அதிக வைட்டமின் டி அளவு இருந்தால், குழந்தைகளின் ஐ.க்யூ மதிப்பும் அதிகரிக்க வழிவகுக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஒரு தாயின் வைட்டமின் டி சத்து தனது குழந்தைக்கு கருப்பையின் மூலமாக அனுப்பப்படுகிறது. அதனால், மூளை வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு செயல்முறைகளை சீராக்க உதவுகிறது என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.

அதிக அளவு வைட்டமின் டி நிறைந்த உணவுகளில் மீன், முட்டை மற்றும் பசுவின் பால் மற்றும் சீரியல்ஸ் போன்றவை அடங்கும். கர்ப்பிணிப் பெண்களுக்கு காணப்படும் வைட்டமின் டி குறைபாடு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். ஏனென்றால், கர்ப்ப காலத்தில் உங்கள் வயிற்றில் வளரும் குழந்தையின் எலும்புகள் வேகமாக வளரச்கூடும். கால்சியம் மற்றும் பாஸ்பேட் அளவைக் கட்டுப்படுத்துவதில் வைட்டமின் டி மிக முக்கிய பங்கு வகிக்கிறது.