காதலிக்க காமம் அவசியமா?

காதல் என்று பேசும்போது, அதில் காமம் என்பது தவிர்க்க முடியாததாகப் பார்க்கப்படுகிறது. காமம் என்ற உணர்ச்சியின் அடிப்படைத் தன்மைகளை ஆராயும் சத்குருவின் இந்தக் கட்டுரை, நம் கலாச்சாரத்தில் காமத்தைக் கடந்து செல்வதற்கான வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதையும் எடுத்துரைக்கிறது.

கேள்வி: யார் மீதாவது காதல் வயப்படும்போது, காமம் என்பது தவிர்க்க முடியாத விஷயமாகிவிட்டது. காமம் அத்தனை முக்கியமான அம்சமாய் இருப்பதேன்?

சத்குரு: காமம் என்பது உடல் ரீதியானது. அது இருக்கத்தான் செய்கிறது. ஆனால், இந்தப் பொருள் உடலுக்கு நீங்கள் எவ்வளவு முக்கியத்துவம் தருகிறீர்களோ அதற்கும் காம உணர்விற்கும் நேரடித் தொடர்பு இருக்கிறது. யாரோ ஒருவருக்கு கல்வி மீது ஆர்வம் ஏற்படும்போது, அவருக்கு உடலுறவின் மீது அதிகமாக நாட்டம் ஏற்படுவதில்லை என்பதைக் கவனித்திருக்கிறீர்களா? காடுகளின் மீது நாட்டம் ஏற்பட்டு ஆப்பிரிக்க காடுகளில் ஆண்டுக்கணக்காக சுற்றித்திரியும் ஒருவருக்கு உடலுறவு சார்ந்த சிந்தனைகள் ஏற்படுவதில்லை, கவனித்திருக்கிறீர்களா? ஏனென்றால், அவருக்குத் தனது உடல் மீது இருக்கும் கவனம் சற்று தளர்ந்திருக்கிறது. திடீரென, அனைத்தும் அவருக்கு வித்தியாசமாய் நிகழத் துவங்குகிறது.

அவர் ஆன்மீகத்தில் எல்லாம் இல்லை, ஆனாலும் அப்படித்தான். ஏனெனில், அவரது கவனம் முழுக்க வேறொன்றில் இருக்கிறது, உடல் மீது இல்லை. ஆனால், யாரோ நாள் முழுக்க அவரது உடல் பற்றிய நினைப்பிலேயே இருக்கும்போது, அவரிடம் காமம் மிகுந்திருப்பதைப் பார்க்கலாம்.

தற்போது, காமம் என்பது சமூகத்தால் விளைவிக்கப்படுகிறது. சமூக சூழ்நிலைகள் காமம் இல்லாமல் உங்களால் வாழ முடியாது என்கிற எண்ணங்களை விளைவிக்கிறது. அது உண்மை அல்ல. இதனால் பலரின் வாழ்க்கை பாதிப்படைந்து இருக்கிறது.

18 வயதில் இதுபோன்ற மனோநிலை நல்லதாகத் தோன்றலாம். ஆனால், 35, 40 வயதுகளில் அதுவொரு முட்டாள்தனமான சுமையாக ஆகிவிடுகிறது, இல்லையா? எல்லோரும் உங்களை உந்தித் தள்ளினாலும் வாழ்வின் இந்தவொரு அம்சத்தில் உங்களுக்கு ஈடுபாடோ அல்லது போதிய சக்தியோ இருப்பதில்லை, வேறு வேலை இல்லாத வரை, இல்லையா?

நீங்கள் இளமையாய், வாழ்வின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் இருக்கும்போது, காமம் என்பது ஒரு குறிப்பிட்ட விதத்தில் உயிர்ப்புடன் இருக்கிறது. அதுமட்டுமல்ல, அத்தனை சிந்தனைகளும் மனதில் அடுக்கடுக்காய் உருவாக்கப்படுகின்றன – எதுவாக இருந்தாலும் கட்டுப்படுத்தக் கூடாது, உடனடியாக செய்துவிட வேண்டும் என்று எண்ணங்கள் விளைவிக்கப்படுகின்றன.

இது கிழக்கத்திய கலாச்சாரங்களில் சொல்லப்படும் அனைத்திற்கும் நேரெதிர் சமாச்சாரமாகவே இருக்கிறது. கிழக்கத்திய கலாச்சாரங்கள், சக்தியை மேலெழுப்ப வேண்டும், அதனை வெளியிடக் கூடாது, உங்கள் சக்தி மேலிருந்து பொங்கிவர வேண்டும், கீழிருந்து கசியக் கூடாது என்றே சொல்லி வந்திருக்கிறது. கீழிருந்து கசிந்தால், அது வெறும் உடலியல் சார்ந்ததாகத்தான் இயங்கும். சக்தி மேலிருந்து கசிந்தால்தான் அதனை ஆன்மீகம் என்போம்.

கீழிருந்து கசியும்போதும் நீங்கள் ஒருவிதமான பரவசத்தை உணரலாம், ஆனால் அது நீடித்து நிலைத்திருக்காது. யாராலும் அதனைத் தக்கவைத்துக்கொள்ளவும் முடியாது. அதுவே மேலிருந்து கசியும்போது, அதனைத் தக்கவைத்துக்கொள்ள முடியும், பல மடங்கு சக்தி வாய்ந்ததாய் அது இருக்கும். மேலிருந்து கசிய வேண்டும் என்றால் நீங்கள் பானையை நிரப்ப வேண்டும். உங்கள் பானை ஓட்டையாக இருந்தால், அது நிரம்பாது, அல்லவா?

ஆனால், உங்கள் ஹார்மோன்களும் வேலை செய்கின்றன, அனைத்தும் ஒரு திசை நோக்கி ஈர்க்கப்படுகிறது. அதனை நீங்கள் அடக்கி வைப்பது தவறு – அதனை நான் பரிந்துரைக்க மாட்டேன். அது எதிர்மறையாய் மாறிவிடும், வேலை செய்யாது.

இதனால்தான், சமூகம் ஒரு அவசியமான சாத்தானை பிடித்துக்கொண்டது – அது திருமணம், சரியா? அவர்கள் திருமணம் செய்துகொள்வது என்கிற மனோநிலைக்கு வந்தார்கள். ஏனெனில், திருமணத்தில் முழுமையாய் அடக்கி வைக்க வேண்டிய தேவை இல்லை, முழுமையாய் காமத்திலேயே திளைத்திருக்க வேண்டிய அவசியமுமில்லை. துவக்கத்தில், அது மிகுந்த சிலிர்ப்பைத் தந்தாலும், அதன்பின் சும்மா அதுபாட்டிற்கு இருக்கிறது.