அதிக காபி குடிப்பதால் உடலில் ஏற்படும் தீங்குகள்

‘காபி’ இந்த வார்த்தையை கேட்டாலே புத்துணர்ச்சிதான். காலையில் எழுந்ததும் செய்தித்தாள் அல்லது கைபேசியுடன் ஒரு கப் காபி குடித்தால்தான், சிலர் அந்த நாளே ஆரம்பமாகும் என்பார்கள். டென்சன் என்றால் காபி, நண்பர்களுடன் அரட்டையடிக்கும் போது காபி, அலைச்சல் என்றாலும் காபி என்று நம் வாழ்வில் காபி ஒரு அங்கமாகவே உள்ளது. இப்படிப்பட்ட காபியினால் உடலுக்கு ஏற்படும் தீங்கு என்ன? இதோ விரிவான ஓர் அலசல்.

காபியில் உள்ள காஃபின் முதன்மையாக நம் உடலில் உள்ள மைய நரம்பு மண்டலத்தைத் தூண்டுகிறது. இது மூளையில் உள்ள நரம்பியக்கடத்திகளை நேரடியாக பாதிக்கிறது. அதிக காபி குடிப்பதால் இரத்த அழுத்தம் அதிகரிக்கும். ஒரு நாளைக்கு 4 கப் காபிக்கு மேல் குடிப்பது ஆயுள் காலத்தை குறைக்கும். இளைஞர்களிடையே காபி நுகர்வு மாரடைப்பை அதிகரிக்கும். காபியில் காஃபின் அதிகம் இருப்பதால் இதனை உட்கொள்பவர்களுக்கு பெரும்பாலும் வயிற்றுப்போக்கு அல்லது அஜீரண கோளாறுகளை ஏற்படுத்துவதாக தெரிகிறது. வெறும் வயிற்றில் காபி உட்கொள்ளும் போது முக்கியமாக இந்த பிரச்சனை ஏற்படுகிறது. தலைவலி அறிகுறிகள் இருக்கும் போது காபியை அளவான குடித்தால் தலைவலி போக்கும் என்பது உண்மை. அதுவே காபி அதிகமாக குடித்தால் ஒற்றைத் தலைவலிக்கு வழிவகுக்கும். காபி குடிப்பது உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோய்க்கு பங்களிக்கிறது.

இருப்பினும், காஃபின் லேசான மருந்துகள் வகையைச் சேர்ந்தது என்பதையும், பெரிய சார்புநிலையை ஏற்படுத்தக்கூடும் என்பதையும் அறிந்து கொள்வது முக்கியம். தலைவலி, குறைந்த ஆற்றல் நிலை, செயலற்ற தன்மை, தசை வலி மற்றும் எரிச்சல் போன்ற கோளாறுகளை காபி குடிப்பதன் மூலம் குறைக்கலாம். அனால், காபி நுகர்வு அதிகம் இருந்தால் உடல் கோளாறுகளும் அதிகம் இருக்கும். எனவே, ஒருநாளைக்கு 2 முறைக்கு மேல் காபி குடிப்பது உடல்நல கோளாறுகளை ஏற்படுத்தும்.