ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு நடராஜர் சிலை திருவீதி உலா

ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு கொங்கு மண்டலத்தில் பிரசித்தி பெற்ற கோவையில் உள்ள நடராஜர் சிலை திருவீதி உலா நடைபெற்றது.

மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில், எல்லா சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி கோவையில் ஸ்ரீ அண்டவாணர் அருள்துறை மற்றும் அனைத்து சிவனடியார்கள் கூட்டமைப்பு சார்பாக ஆர்.எஸ்.புரம் சாலையில் ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் கொங்கு மண்டலத்தில் பிரசித்தி பெற்ற ஆயிரம் கிலோ எடை கொண்ட உலோக நடராஜர் சிலை சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, நெய் அபிஷேகமும், 16 திரவிய பொருட்களில், சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மஹா தீபாராதனை நடைபெற்றது. பின்னர், நடராஜர் சிறப்பு அலங்கார திருவீதி உலா நடைபெற்றது. இதில் அலங்கராம் செய்யப்பட்ட நடராஜர் ஆர்.எஸ்.புரம் ,கவுலிபிரவுன் சாலை வழியாக மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. விழாவில் இறுதியாக அனைவருக்கும் திருவாதிரை களி பிரசாதம் வழங்கப்பட்டது.