20 சதவீத இட ஒதுக்கீடு வேண்டி பாமகவினர் கோவையில் ஆர்ப்பாட்டம்

கோவை: வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு தர வலியுறுத்தி கோவையில் பா.ம.க.,வினர் வடக்கு தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வன்னியர் சமுதாய மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 20 சதவீத இட ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பாட்டாளி மக்கள் கட்சியினர் இன்று (30.12.2020) ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவை வடக்கு தாசில்தார் அலுவலகம் முன்பு பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அலுவலகத்தை முற்றுகையிட சென்ற அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனைத் தொடர்ந்து அவர்கள் வடக்கு தாசில்தாரிடம் மனு ஒன்றை அளித்தனர். அதில் 20 சதவீத இட ஒதுக்கீடு உடனடியாக வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர்.