எஸ்.என்.எம்.வி கல்லூரியில் கலந்தாய்வு கூட்டம்

ஸ்ரீ நேரு மகா வித்யாலயா கல்லூரியில் மேலாண்மைத்துறை முன்னாள் மாணவர்களின் கலந்தாய்வு கூட்டம் 6 நாட்கள் இணையம் வழியாக நடைபெற்றது. இதில் எச்டிஎஃப்சி வங்கியின் மேலாளர் (சிறுகுறு தொழில் பிரிவு) குமரக்கண்ணன், அனுரா ப்ராப்பர்ட்டீஸின் நிர்வாக பங்குதாரர் பிரசன்னா பாபு, வில் பிரஷின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாகி செல்வகுமார் வரதராஜன், ஹாய்துபாய்.காமின் திட்ட இயக்குநர் ஜோஸ் ஃபெலிக்ஸ், பெங்களூர் கிரெடிட் அக்சஸ் கிராமினின் தலைமை வணிக அதிகாரி கணேஷ் நாராயணன், துளித் ஆகார பிரைவேட் லிமிடெடின் துணைத் தலைவர் ஜெய்தீர்த் வெங்கட நரசிம்மம் ஆகியோர் கலந்துகொண்டு தங்களது துறையில் சந்தித்த சவால்களையும், அனுபவங்களையும் மற்றும் தாங்கள் மேற்கொண்ட முயற்சிகளையும் எடுத்துரைத்தனர். மேலும், தற்போது நிலவிவரும் சூழ்நிலைகள் மற்றும் தேவைகளையும் எடுத்துரைத்தனர்.