உலக டீ தினம்

டீ, நம் வாழ்வில் ஒரு அங்கமாகவே உள்ளது. எவ்வளவு தலைவலி, களைப்பு, சோர்வு, அசதி என்றாலும் ஸ்ட்ராங்கா ஒரு டீ குடித்தால் போதும் உடல் முழுவதும் புத்துணர்ச்சி பரவி சுருசுருப்பாகிவிடுவோம். அதனால்தான் களத்தில் இறங்கி உழைக்கும் ஏழைகளின் நண்பனாக உள்ளது. பசியில் இருந்தால் ஒரு டீயும் பிஸ்கட்டும் சாப்பிட்டால் போதும் வயிறு நிறையும்.

இப்படி எல்லா விதத்திலும் நம்மோடு இருக்கும் டீயை கொண்டாட ஒரு நாள் வேண்டாமா..? அதை கொண்டாடவே ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 15 உலக டீ தினமாக கொண்டாடப்படுகிறது. குறிப்பாக இந்தியா, நேப்பால், வியட்நாம், இலங்கை, கென்யா, பங்களாதேஷ், மலேசியா, இந்தோனேசியா, உகண்டா போன்ற நாடுகளில் வெகு விமர்சையாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது.