ஹோண்டாவின் பிக்விங் விற்பனையகம் கோவையில் துவக்கம்

கோவை : நடுத்தர அளவிலான மோட்டார் சைக்கிள் பிரிவில் ஹைனெஸ்-சிபி350 மூலமாக சந்தையில் வெற்றிகரமாக அதிர்வுகளை உருவாக்கிய ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா பிரைவேட் லிமிடெட் உயர்ந்த பயண அனுபவத்தை தரும் பிரீமியம் ரக பெரிய இரு சக்கர வாகன வர்த்தகத்தை அதிகரிக்கும் பொருட்டு, கோவையில் தனது ஹோண்டா பிக்விங் விற்பனையகத்தை தொடங்கியுள்ளது.

கோவையில் பிக்விங் விற்பனையகம் தொடங்கப்படுவது குறித்து ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா பிரைவேட் லிமிடெட்டின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் பிரிவு இயக்குனர், யத்விந்தர் சிங் குலேரியா பேசுகையில், “கடந்த செப்டம்பர் மாதம் எங்களது சமீபத்திய சர்வதேச அறிமுகமான ஹைனெஸ் சிபி350 இடைநிலை அளவிலான மோட்டார்சைக்கிள் பிரியர்களுக்கு புதிய உற்சாகத்தை அளித்தது. இதற்கான தொடக்க வரவேற்பு மிகப்பெரிய அளவில் இருந்தது. இதற்கு அடுத்தபடியாக, எங்களது வாடிக்கையாளர்களுக்கு உண்மையான, மாறுபட்ட, ஆழமான சேவை அனுபவத்தை அளிக்க விரும்பினோம். அதற்காக ஹோண்டா பிக்விங்கை (ஹோண்டாவின் பிரத்யேக பிரீமியம் மோட்டார்சைக்கிள் நெட்வொர்க்) விரிவுபடுத்தினோம். இன்று கோவை நகரில் பிங்விங் தொடங்கப்படுவதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம். இந்த புதிய பிரீமியம் விற்பனையகம் மூலமாக, கோவையிலுள்ள வாடிக்கையாளர்களுக்கு ஹோண்டா மோட்டார்சைக்கிள் மூலமாகக் கிடைக்கும் கேளிக்கையை அளித்து, மத்திய அளவிலான பிரீமியம் மோட்டார் சைக்கிள்களை வாங்க வைப்பதே எங்களது நோக்கம்” என்று தெரிவித்தார்.