கே.பி.ஆர் கலை கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் கணினி அறிவியல் துறையும் க்ரேட்ஸ்கீ சாஃப்ட்வேர் சொல்யூஷன் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டனர்.

கல்லூரி முதல்வர் பாலுசாமி, கணினி அறிவியல் துறை முதன்மையர் சசிகலா மற்றும் க்ரேட்ஸ்கீ சாஃப்ட்வேர் சொல்யூஷனின் முதன்மை நிர்வாக அதிகாரி அச்சுதராமன் கலந்து கொண்டு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பரிமாற்றிக் கொண்டனர். இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலமாக மாணவர்கள், கணினி மென்பொருள் தொடர்பான பல்வேறு உத்திகள் மற்றும் பயிற்சி வகுப்புகள் என இன்றைய தேவைக்கேற்ப கணினி பயன்பாட்டினைப் பெறுவார்கள். இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை கணினி அறிவியல் துறை முதன்மையர் சசிகலா செய்திருந்தார். இந்நிகழ்வில், கல்லூரி முதல்வர், முதன்மையர்கள், மற்றும் பேராசிரியர்கள், கலந்து கொண்டனர்.