புயலால் பாதிப்படைந்த மீனவ மக்களுக்கு வானதி உதவி !

நிவர் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை நொச்சி குப்பம் மீனவ மக்களுக்கு பா.ஜ.க. மகளிர் அணியின் தேசிய தலைவர் வானதி சீனிவாசன் இன்று நிவாரண பொருட்களை வழங்கினார்.

நொச்சி குப்பம் பகுதியை சார்ந்த 800 மீனவ குடும்பங்களுக்கு மளிகை பொருட்களை நேரில் சென்று வழங்கினார்.