கார்த்திகை தீபத்தையொட்டி அகல் விளக்குகள் விற்பனை தீவிரம்

கோவை : கார்த்திகை மாதத்தில் வரும் திருக்கார்த்திகை நாளில் பொதுமக்கள் வீடுகளில் தீபம் ஏற்றி வழிபடுவார்கள் தீபத்தை ஒட்டி மண்பாண்டத் தொழிலாளர்கள் அகல்விளக்கு தயாரிப்பு பணியில் கடந்த ஒரு மாதமாக ஈடுபட்டு வந்தனர்.

கோவை கவுண்டம்பாளையம், கிணத்துக்கடவு உள்ளிட்ட பகுதியில் களிமண் மூலமாக அகல்விளக்கு தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. சிறிய மற்றும் பெரிய அளவிலான விளக்குகளை மண்பாண்ட தொழிலாளர்கள் தயாரித்துள்ளனர்.

இந்நிலையில் திருக்கார்த்திகை தீப நாளை கொண்டாடப்பட உள்ளதால் கோவையில் அகல்விளக்கு விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது. சிறிய அளவிலான அகல் விளக்குகள், இலை வடிவிலான விளக்குகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. தவிர வீடுகளில் வாசல்களில் தொங்க விடும் வகையில் சிறிய அளவிலான விளக்குகள் மூன்று முகம், நான்கு முகம், ஐந்து முகம் கொண்ட விளக்குகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. கார்த்திகை தீபத்திற்கு இன்னும் ஒருநாள் உள்ள நிலையில் கவுண்டம்பாளையம், பூ மார்க்கெட் பகுதிகளில் அகல் விளக்கு விற்பனை தீவிரமாக நடந்து வருகிறது.