பார்க் கல்வி குழுமம் : முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி

கோவை கணியூர் மற்றும் கருமத்தம்பட்டியில் இயங்கிவரும் பார்க் கல்வி குழுமத்தின் இன்ஜினியரிங், மரைன் மற்றும் ஆர்க்கிடெக்சர் கல்லூரி ஆகியவற்றின் முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி இணையம் வழியாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக விஜய் டிவி, நீயா நானா புகழ் கோபிநாத் கலந்து கொண்டார்.

பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி முதல்வர் மோகன் குமார் வரவேற்பு உரையாற்றினார். பார்க் கல்வி குழுமத்தின் முதன்மை செயல் அலுவலர் அனுஷா கலந்துகொண்டு பேசுகையில், பொறியியல் இல்லாமல் மனித வாழ்வு இல்லை. இன்று கொரோனாவை எதிர்கொள்வதிலும், நிவார் புயலை கணிப்பதிலும், நாம் அனைவரும் இணைய வழியில் ஒன்று சேர்வதற்கும் பொறியியல் துறையின் பங்களிப்பு உள்ளது. என்றும், தரமான கல்வியை நியாயமான கல்வி கட்டணத்தில் வழங்க வேண்டுமென்று நமது தமிழ்நாட்டில் முதல் முதலில் சுயநிதி பொறியியல் கல்லூரியை துவக்கிய குழுமம். மாணவர்களை கல்வியில் மட்டுமல்ல எல்லா ஆளுமை திறமையையும் வளர்க்க உதவுகிறது. இந்த குழுமத்தில் பயின்ற சுமார் ஒரு லட்சம் முன்னாள் மாணவர்கள் இன்று உலகம் முழுவதும் பல துறைகளில் சாதித்து கொண்டிருக்கீறார்கள் என்றார். மேலும், ஒவ்வொரு சவாலும் நமக்கு அளிக்கப்படும் வாய்ப்புகளே. 8 மாதங்களுக்கு முன் ஜூம் (ZOOM) என்றால் பலருக்கு தெரியாது. ஆனால், சூழ்நிலைகளின் காரணமாக இன்று இதை பற்றி தெரியாதவர்கள் கிடையாது.  ஆகவே எந்த சவாலையும் சந்திக்க தயாராகுங்கள் என்று கூறி தனது உரையை முடித்தார்.

பார்க் கல்வி குழுமத்தின் தலைவர் ரவி பேசியபோது, ராமாயணம் துவங்கி இன்றுவரை ஆசானிடம் நேரடியாக கல்வி கற்ற நாம் இன்று இணைய வழி கல்விக்கு தள்ளப்பட்டிருக்கிறோம்.  இதிலும் பல நன்மைகளே நிறைந்திருக்கின்றன. அலைச்சல் மற்றும் செலவு இல்லாமல் நாம் இருக்கும் இடத்திலேயே நமக்கு விருப்பமான பொறியியல் கல்லூரியை தேர்வு செய்துள்ளோம்.  புதிய சிந்தனைகளையும், கண்டுபிடிப்புகளையும் மக்கள் ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதையே கொரோனா உணர்த்தியுள்ளது என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கோபிநாத் தனது உரையில், இந்த கொரோனா காலத்திற்குப்பின் எல்லா துறைகளிலும் புதிய கண்டு பிடிப்புகளுக்கு பல வேலை வாய்ப்புகள் ஏற்படும். ஆகவே தொழில்நுற்பத்தை பயன்படுத்தி புதிய உலகை வடிவமைக்க பொறியியல் துறையை தேர்வு செய்த அனைவரையும் ஊக்குவித்துப் பேசினார்.