அரசியல் சாசனம் குறித்த விழிப்புணா்வு சமுதாயத்தில் ஏற்பட வேண்டும்

ராமகிருஷ்ணா கல்லூரியில் வழக்கறிஞா் எஸ்.சுதா்சன் பேச்சு

கோவை, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பாக 70வது இந்திய அரசியல் சாசன தினம் கல்லூரி வளாகத்தில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினா்களாக தென்னிந்திய உயா்நீதி மன்ற வழக்கறிஞா் எஸ்.சுதா்சன் கோவை மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞா் எம்.ஆனந்தன் கலந்துகொண்டனா்.

எஸ்.சுதா்சன் பேசுகையில், இந்திய அரசியல் சாசனத்தின் வரலாறு, அடிப்படை உரிமைகள் குறித்து பேசியதோடு அரசியல் சாசனம் குறித்த விழிப்புணா்வு சமுதாயத்தில் ஏற்பட வேண்டும் என்றார். எம்.ஆனந்தன் பேசுகையில், இந்திய அரசியல் சாசன வரைவு சட்டம் குறித்த டாக்டா் அம்பேத்காரின் மிக முக்கியமான உரை குறித்துப் பேசினார். மேலும், சமூக பொருளாதாரம் அனைவருக்கும் சமம் என்ற அவரின் கனவு இன்றும் நிறைவேறாத ஒன்றாக இருக்கின்றது என்பதைக் குறிப்பிட்டதோடு பல்வேறு விதமான அரசியல் சாசன சட்ட வரையறைகளையும் எடுத்துரைத்தார். இந்திய அரசியல் சாசன வரையறை நிறைவேற்றப்பட்ட நாள் முதற்கொண்டு இன்றுவரை 104 சட்டத்திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்பதைக் குறிப்பிட்டுச் சொன்னார்.

கல்லூரியின் முதல்வா் மற்றும் செயலா் பி.எல்.சிவக்குமார் இந்நிகழ்விற்குத் தலைமை தாங்கியதோடு இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படை உரிமைகள் குறித்த ஆா்டிகிள் 51 என்ற கொள்கை வரையறை நகலை மாணவா்களுக்கு வழங்கினார். இந்திய அரசியல் சாசனத்தை அனைவரும் முழுமையாக புரிந்துகொள்ளவும் மாணவா்களுக்கு விழிப்புணா்பு ஏற்படுத்தும் விதமாக இந்நிகழ்வு அமைந்திருந்தது.

நாட்டுநலப்பணித்திட்ட திட்ட அலுவலா்கள் எஸ்.பிரகதீஸ்வரன், ஏ.சுபாஷினி, ஆர்.நாகராஜன் ஆகியோர் மாணவா்கள் சமூகவலைதளங்களில் நேரலையில் கண்டுகளிக்கும் வண்ணம் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனா்.