தமிழகத்தில் 69 ரயில்கள் இன்று ரத்து

தமிழகத்தில் 69 ரயில்கள் இன்று ரத்து.. சென்னையில் விமானம் மற்றும் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தம்..

நிவர் புயலால், தமிழகத்தில் இன்றும் 69 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பேருந்து மற்றும் விமான சேவைகளும் தடைபட்டுள்ளன. மேலும் சென்னையில் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 69 ரயில்கள் இன்று ரத்து. சென்னையில் விமானம் மற்றும் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தம்.

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக 7 மாவட்டங்களில் பேருந்துகளும், தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில் சேவைகளும் புதன்கிழமை ரத்து செய்யப்பட்டன. இந்த நிலையில், மேலும் 21 ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. அதன்படி வியாழக்கிழமை, சென்னை சென்ட்ரலில் இருந்து கோவைக்கு செல்லும் 6 ரயில்களின் சேவை இருமார்க்கமாகவும் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் சென்னை சென்ட்ரல் – பெங்களூரு இடையேயான 4 ரயில்களின் சேவையும், சென்னை சென்ட்ரலில் இருந்து திருப்பதி செல்லும் 2 ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதேபோல் சென்னை சென்ட்ரல் – மங்களூரு இடையேயான ரயில் சேவையும் ரத்து செய்யப்படுகிறது. காரைக்குடி – சென்னை, மதுரை – சென்னை, திருச்சி- சென்னை இடையேயான ரயில் சேவைகளும் வியாழன் அன்று இருமார்கமும் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

Source : News 18 Tamil