கோவையில் நடைபெறும் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு

கோவையில் நடைபெற்றுவரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் குமாரவேல் பாண்டியன் இன்று 24.11.2020 நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாநகராட்சி பகுதிக்களுக்குட்பட்ட அனைத்து குடியிருப்பு கட்டிடங்கள், வணிக வளாகங்கள் மற்றும் அரசு அலுவலகக் கட்டிடங்கள் மற்றும் சாலைகளில் உள்ள தாழ்வான பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை ஏற்படுத்துவது தொடர்பாக வடக்கு மண்டலம் வார்டு எண்.43க்குட்பட்ட பகுதியில் மழைநீர் சேகரிப்பு பற்றி ஆதித்யா அக்குவாடெக் சொல்யூசன் நிறுவனம் அவர்களின் அலுவலகக் கட்டிடத்தில் நிறுவப்பட்டுள்ள மழைநீர் வடிகால் சேகரிப்பு கட்டமைப்பு, சூரிய ஒளி மின் அமைப்பு மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவை நடைபெறும் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் குமாரவேல் பாண்டியன் கேட்டறிந்தார்.

தொடர்ந்து, கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் உடையாம்பாளையம் பகுதியிலுள்ள மே பிளவர் மெட்ரோ பாலிஸ் அபார்ட்மென்ட் குடியிருப்புப் பகுதியில்  உள்ள அனைத்து வீடுகளிலிருந்து சேகரிக்கப்படும் குப்பைகளை மக்கும் குப்பைகள், மக்கா குப்பைகள் என தனித்தனியாக தரம் பிரித்து வழங்கப்பட்டுவரும் பணிகள் நடைபெற்றுவருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், உடையாம்பாளையம் ரோடு, மீனா எஸ்டேட் பகுதியில் பிரதான குடிநீர் குழாய் இணைக்கும் பணிகள் நடைபெற்றுவருதை பார்வையிட்டு ஆய்வு செய்த ஆணையாளர், தொடர்ந்து, வாலாங்குளத்தில் ஆகாயத்தாமைரை அகற்றும் பணிகள் நடைபெற்றுவருவதை பார்வையிட்ட ஆணையாளர் வெளியேற்றப்படும் ஆகாயத்தாமரைகளை வாகனங்கள் மூலம் அப்புறப்படுத்தி தூய்மைப்படுத்திடுமாறு தொடர்புடைய அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.