பா.ஜ.க தேசிய தலைவரிடம் வாழ்த்துப்பெற்ற வானதி

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் துணை தலைவராக பணியாற்றி வந்த வானதி சீனிவாசன், புது டில்லியில் அக்கட்சியின் தேசிய மகளிரணி தலைவராக சமீபத்தில் பொறுப்பேற்றதை அடுத்து, அவர் கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டாவை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றுக்கொண்டார். அந்த சந்திப்பின்போது, வானதியின் கணவர் சீனிவாசனும் உடனிருந்தார்.

இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டாவும் திரு.சீனிவாசனும் அகில பாரத வித்தியார்த்தி பரிசத் காலத்திலிருந்தே பல ஆண்டு காலமாக நண்பர்களாய் இருந்துள்ளனர். இருவரும் இந்த சந்திப்பு மூலமாய் நட்புப் பாராட்டிக்கொண்டனர்.