கோவையில் ஊரகம், நகர்ப்புற பகுதிகளை சேர்ந்த 162 பேருக்கு கொரோனா

கோவையில் கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.

சுகாதாரத் துறையினர் இன்று (18.11.2020) வெளியிட்ட பட்டியலில் கோவையில் ஊரகம், நகர்ப்புற பகுதிகளை சேர்ந்த 162 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46 ஆயிரத்து 920 ஆக உயர்ந்துள்ளது.

தவிர மருத்துவமனைகளில்  சிகிச்சைப் பெற்று வந்த ஒருவர் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து கோவையில் கொரோனா நோய்த் தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 593 ஆக அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சைப் பெற்று வந்த 205 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பினர். கோவையில் இதுவரை 45 ஆயிரத்து 510 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். தற்போது 817 பேர் சிகிச்சையில் உள்ளனர்.